Last Updated : 08 Dec, 2021 04:07 AM

 

Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

உத்தரபிரதேசத்தில் உணவில் போதை மருந்து கலந்து 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: போக்சோ வழக்கில் பள்ளி முதல்வர் கைது

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு உணவில் போதை மருந்துகலந்து கொடுத்து பாலியல்கொடுமை செய்ததாக பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குஉ.பி.யின்முசாபர்நகர், புர்காஜி பகுதியில் சூர்யதேவ் பப்ளிக் ஸ்கூல் உள்ளது. பிரபல பள்ளிகளில் ஒன்றான இதில் பத்தாம் வகுப்பில் 29 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.

இவர்களுக்கான பயிற்சித் தேர்வு அருகிலுள்ள ஜிஜிஎஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் கடந்தமாதம் 19-ம்தேதி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு முதல்நாள்வகுப்புக்கு வந்தவர்களில் 17 மாணவிகளை மட்டும் சூர்யதேவ் பள்ளிவகுப்பில் நள்ளிரவு வரை படிக்கவேண்டும் என்று கூறி அங்கு தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் இரவு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து இவர்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மயக்க நிலையில் இருந்த 17 மாணவிகள் தங்கள் வீட்டுக்கு திரும்பியபின் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளனர்.

இது தொடர்பாக ஜிஜிஎஸ் பள்ளி முதல்வர் யோகேஷ் குமார்சவுகான், சூர்யதேவ் பள்ளி முதல்வர் அர்ஜுன்சிங் ஆகியோர் மீதுமாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். ஆனால் சம்மந்தப்பட்ட போபா காவல் நிலையத்தினர் அப்புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து அத்தொகுதிபாஜக எம்எல்ஏ பிரமோத் உத்வலிடம் பெற்றோர் புகார் அளித்தனர்.அவரது தலையீட்டின் பேரில்முசாபர்நகர் மாவட்ட எஸ்எஸ்பி அபிஷேக் யாதவ் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். இதில் தலைமறைவாகி இருந்த ஜிஜிஎஸ் பள்ளி முதல்வர் யோகேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்மீது, பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவான சூர்யதேவ்பள்ளி முதல்வர் அர்ஜுன்சிங்கை கைது செய்வதற்கு 5 போலீஸ்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் எஸ்எஸ்பி அபிஷேக் யாதவ் கூறும்போது, “அந்த வகுப்பில் மாணவர்களுடன் சேர்த்துமொத்தம் 29 பேர் பயிலும் நிலையில் இந்த 17 மாணவிகளை மட்டும் அழைத்து தங்கவைத்துள்ளனர். அவர்களுடன் ஒரு பெண் ஆசிரியர் கூட தங்க வைக்கப்படவில்லை” என்றார்.

இந்த வழக்கை பதிவு செய்யாமல் அலைக்கழித்த போபா காவல்நிலையஆய்வாளர் வி.கே.சிங் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட் டுள்ளார். இவர் மீது அலட்சியம் காட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x