

‘‘சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) உட்பட முக்கிய மசோதாக்களை மாநிலங்களவை யில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடந்தது. அப்போது பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப் புடன் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் சுமூகமாக நடக்கும் என்று எதிர் பார்க்கிறேன். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறை வேற்றப்படாமல் உள்ளன. மக்களின் நலன் கருதி அந்த மசோதாக்களை மாநிலங்களவை யில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 300-க்கும் மேற்பட்ட திருத்தங் களை செய்ய எதிர்க்கட்சியினர் கோரியுள்ளனர். அவற்றை அவர்கள் திரும்ப பெற்று குடியரசுத் தலைவர் அலுவலகத் தின் மாண்பை காக்க வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற அவை களின் பாரம்பரிய நாகரிகத்தையும் பேண வேண்டும்.
‘மாநிலங்களவை என்பது யோசனைகளின் அரங்கம். மக்களவைக்கும் மாநிலங் களவைக்கும் இடையில் ஒருங் கிணைப்பு வேண்டும்’ என்று முன்னாள் பிரதமர் நேரு கூறியிருக் கிறார். நேருவின் எண்ணத்துக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்படி, மாநிலங் களவையில் நிலுவையில் உள்ள எல்லா மசோதாக்களையும் நிறை வேற்ற எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
(குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கொண்டு வந்த ஒரு திருத்தத்துடன் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் திருத்தம் மேற்கொள்ள ஆதரவாக 95 வாக்கு களும், எதிராக 61 வாக்குகளும் கிடைத்தன. இதனால் மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.)
ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ண யிக்கப்பட்டது. இது பஞ்சாயத்து தேர்தலில் குடிமக்கள் எல்லோ ரும் போட்டியிடலாம் என்ற உரி மையை பறிப்பதாக எதிர்க்கட்சி கள் கூறினர். இதுகுறித்து குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லை என்று கூறி திருத்தம் மேற்கொள்ள எதிர்க் கட்சியினர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆசீர்வதிக்கப்பட்ட கட்சி காங்கிரஸ்
மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி கூட ஆசிர்வதிக்கப்பட்ட கட்சிதான் (மரணத்தை போல) என்று சில நேரங்களில் நான் உணர்வதுண்டு. ஏனெனில் காங்கிரஸை நாம் எப்போதெல்லாம் விமர்சிக்கிறோமோ, அப்போது ‘எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்’ என்றுதான் ஊடகங்கள் கூறுகின்றன. அதேநேரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தையோ பகுஜன் சமாஜ் கட்சியையோ விமர்சித்தால், ‘ஐஜத மீது தாக்குதல், பகுஜன் சமாஜ் மீது தாக்குதல்’ என்று ஊடகங்கள் கூறுகின்றன. காங்கிரஸை விமர்சிப்பதில்லை. அதற்கு கெட்ட பெயர் வந்ததில்லை. மரணத்தை யாரும் விமர்சிப்பதில்லை. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது மரணம். காங்கிரஸ் கட்சியும் அதுபோல்தான் உள்ளது. யாராவது ஒருவர் இறந்தால், ‘அவர் புற்றுநோயால் இறந்து விட்டார்’, ‘அவர் வயதானதால் இறந்து விட்டார்’ என்றுதான் கூறுகின்றனர். மரணத்தை யாரும் குறை சொல்வதில்லை. இவ்வாறு மோடி பேசினார்.