ஹைதராபாத்தில் 10-ம் வகுப்பு மாணவர் கடத்திக் கொலை

ஹைதராபாத்தில் 10-ம் வகுப்பு மாணவர் கடத்திக் கொலை
Updated on
1 min read

ஹைதராபாத்தில் பணத்துக்காக 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அட்டைப்பெட்டிக்குள் மறைத்துவைகக்ப்பட்டிருந்த மாணவரின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு கூறும்போது, "சாஹின்யகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ராஜேந்தர் நகரில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிலை செய்து வருகிறார்.

இவரது மகன் அபய் (15) புதன்கிழமை மாலை 5 மணியளவில் அருகிலிருக்கும் கடைக்குச் சென்றிருக்கிறார். இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடனடியாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அபய் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது அபய் கடைக்குச் சென்று திரும்பிவரும்போது ஒருவர் அவரை வழிமறித்து பேச்சு கொடுப்பதும், அவர் ஏற்கெனவே அறிமுகமானவர் போல் அபய் பேசுவதும், பின்னர் அவருடன் இருசக்கர வாகனத்தில் அபய் செல்வதும் பதிவாகியிருந்தது.

நாங்கள் விசாரணையை தொடங்கிய சிறிது நேரத்தில் சிறுவனின் சித்திக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து அபயை கடத்தி வைத்திருக்கிறோம். அவரை விடுவிக்க ரூ.10 கோடி தர வேணும் எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அவர் இந்தியில் பேசியுள்ளார்.

10 நிமிடங்களுக்குப் பிறகு அபயின் தந்தைக்கு போன் செய்த மர்ம நபர் உங்கள் மகனை விடுவிக்க ரூ.5 கோடி கொடுங்கள் என மிரட்டியுள்ளார். மர்ம நபரின் அழைப்பு செகுந்தராபாத்தில் இருந்து வந்ததை உறுதி செய்த போலீஸார் சிறப்புப் படைகளை அங்கு அனுப்பினர். ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மாணவர் அபயின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அட்டைப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளியை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in