

விண்ணில் செலுத்தப்படும் ராக் கெட்டுகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த திட்ட மிட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்துள்ளார்.
‘ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா’வின் கருத்தரங்கு ஹைதராபாத்தில் நடந்தது. இதில் இந்திய விண் வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண்குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஓர் ஆண்டுக்கு 7 ராக்கெட் டுகளை இஸ்ரோ செலுத்தி வருகிறது. விண்ணில் இந்தியாவின் 34 செயற்கை கோள்கள் உள்ளன. ஆனால், நாட்டின் தேவையை விட இந்த எண்ணிக்கை குறைவு. பூமியின் பருவ நிலை மாற்ற ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்புக்கு கூடுதலாக செயற்கை கோள்கள் தேவை.
எனவே, விண்ணில் செலுத்தப் படும் ராக்கெட்டுகளின் எண்ணிக் கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்த இஸ்ரோ திட்டமிட்டுள் ளது. இதன் அடுத்த கட்டமாக ராக்கெட்டுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 18 ஆக உயர்த்தப் படும். இந்த இலக்கை அடைய தொழிற்துறையினரின் ஒத்துழைப் பையும் கேட்டுள்ளோம். ராக்கெட் டுகள் வடிவமைப்பு, அதற்கு தேவையான பொருட்களை மேம்படுத்துதல், ராக்கெட்டுகளை வடிவமைக்கும் திறனை மேம் படுத்திக் கொள்ளுதல் போன்ற பல்வேறு முக்கிய விவகாரங் களில் அதிக கவனம் செலுத்தும் படி தொழிற்துறையினரை கேட்டுள்ளோம். இவ்வாறு கிரண்குமார் பேசினார்.
முதலீடு, மேம்பாடு, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றை தனியார் தொழிற்துறையினருடன் இணைந்து இஸ்ரோ செயல் படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.
‘ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா’வின் ஹைதரா பாத் பிரிவு தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி கூறும்போது, ‘‘ஏரோஸ் பேஸ் துறை தொடர்பான நிறு வனங்களை இந்தியாவில் தொடங்கும்படி வளர்ந்த நாடு களை கேட்டுக் கொண்டுள்ளோம். இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து எங்க ளுக்கு பதில் கிடைத்துவிடும். அதன்பிறகு வளர்ந்த நாடுகளுடன் இணைந்து ஏரோநாட்டிக்கல் துறையில் உள்நாட்டு நிறுவ னங்கள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை தொடங்க நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.