

உத்தராகண்ட் மாநிலத்தின் கரோனா தொற்று தடுப்புப்பணியிலிருந்த ஊர்காவல் படையினருக்கு ரூ.6000 ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநிலம் ஆளும் பாஜகவின் முதல்வர் புஷ்கர்சிங் தாமி அறிவித்துள்ளார்.
உத்தராகண்டில் ஊர்காவல் படையின் நிறுவன நாள் கொண்டாட்டம் நேற்று தலைநகரான டெராடூனில் நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பேசிய முதல்வர் தாமி, ‘‘கரோனா தொற்றுப்பணியில் ஊர்காவல் படையினர் ஆறிய தொண்டு பாராட்டத்தக்கது. இதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒரே தொகையாக ரூ.6000 அளிக்கப்படும்.’’ என அறிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய முதல்வர் தாமி, ஊர்காவல் படையில் கூடுதலாக 6500 ஜவான்களை புதிதாக பணியமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த படையின் ஜவானான ரோஷன்சிங் என்பவர் கரோனா பணியில் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினருக்கு உதவித்தொகையான ரூ.2 லட்சம் அளித்தார். இதை ரோஷனின் மனைவியான பபிதா பெற்றுக் கொண்டார்.