தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 9,12,036 சமையல் எரிவாயு இணைப்புகள்

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 9,12,036 சமையல் எரிவாயு இணைப்புகள்
Updated on
1 min read

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 9,12,036 சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர் கூறியதாவது:
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட சமையல் எரிவாயு இணைப்பு உட்பட 2020-21 மற்றும் 2021-22 (ஏப்ரல் – அக்டோபர் 2021) நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட எரிவாயு இணைப்புகளின் மாநிலம் வாரியான விவரங்கள் உள்ளன.

இதன்படி தமிழ்நாட்டில், 9,12,036 சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதுடன், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 33,76,644 இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்க கரீஃப் கல்யாண் திட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை உஜ்வாலா திட்டப்பயனாளிகளுக்கு 3 எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in