

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை, நாகாலாந்தில் ராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நாகலாந்து மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் ஒரு ஜவான் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்டனர்.
தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக பாதுகாப்புப் படையினர்தரப்பில் தெரிவிக்கப்படடுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை, அதே நேரத்தில் பொதுமக்கள் பயங்கரவாதிகளாக தவறாக கருதப்பட்டதா இல்லையா என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது. ஜவான் ஒருவரின் மரணத்தை உறுதி செய்து, இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும். எங்கள் சொந்த நிலத்தில் பொதுமக்களோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களோ பாதுகாப்பாக இல்லாதபோது உள்துறை அமைச்சகம் என்ன சரியாக செய்கிறது?''
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.