கிராமத்தில் மதுக்கடையை மூட 94% வாக்குகள்: ராஜஸ்தானில் தேர்தல் நடத்தி சாதித்த பெண்கள்

கிராமத்தில் மதுக்கடையை மூட 94% வாக்குகள்: ராஜஸ்தானில் தேர்தல் நடத்தி சாதித்த பெண்கள்
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தைச் சேர்ந்த கச்சபலீ கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. துணை ஆட்சியர் (எஸ்டிஎம்) நிலையிலான அதிகாரி ஒருவரின் கண்காணிப்பின் கீழ் இக்கடை இயங்குகிறது.

கடந்த ஜனவரி 26-ம் தேதி, இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என கூறி, பெண்கள் சிலர் ஒன்று திரண்டு தீர்மானம் இயற்றினர். சீதா தேவி என்ற பெண்தான் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்.

இக்கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், மதுக் கடை வேண்டுமா வேண்டாமா என் பதைத் தீர்மானிக்க பொது வாக் கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை, சுங்கத் துறை விதி களின்படி, 51 சதவீத வாக்காளர்கள் மதுக்கடைக்கு எதிராக வாக்களித் தால் அப்பகுதியில் மதுக்கடை செயல்பட தடை விதிக்கப்படும்.

பொது வாக்கெடுப்பு, கிராம ஊராட்சித் தேர்தலைப் போன்றே முறையாக நடத்தப்படும். மதுக் கடை கூடாது என்பதில் உறுதியாக இருந்த பெண்கள் குழுவினர் 2 மாதம் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 2039 வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கையில், 1937 வாக்குகள் அதாவது 94 சதவீத வாக்குகள் மதுக்கடையை மூட வேண்டும் என்பதற்கு ஆதரவாக அளிக்கப்பட்டிருந்தன. ஏறக் குறைய ஒட்டுமொத்த கிராமமும் மதுக்கடை வேண்டாம் என வாக் கெடுப்பு மூலம் தெரிவித்துள்ளது.

இது அந்த பெண்கள் அணியின் தீவிர பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றி.

இதுதொடர்பாக சீதாதேவி கூறும்போது, “மது அருந்துபவர் கள் ஒன்று சாலை விபத்து அல்லது உடல் நலம் குன்றி உயிரிழக்கின் றனர். குடித்து விட்டு மனைவியை அடிக்கின்றனர்” என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் இக் கிராமத்தைச் சேர்ந்த 84 பேர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுள் ஒருவரான கிமி தேவி கூறும்போது, “ குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக தினமும் ரூ.100 சம்பாதிக்கும் பெண்களிடம், அவர்களின் கணவர், அந்தப் பணத்தைக் குடிப்பதற்காக அடித்துப் பிடுங்கிச் செல்கின்றனர். பிறகு, குழந்தைகளுக்கு பெண்கள் எப்படி உணவளிப்பார்கள்” என்றார்.

கட்டு தேவி என்பவரின் கணவர், மது அருந்தி, கல்லீரல் பாதித்து 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். “அவரின் சிகிச்சைக்காக வாங்கிய ரூ.2 லட்சம் கடனை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித் துள்ளார்.

ராஜஸ்தானில் தொலைதூர கிராமமொன்றில் ஏற்பட்டுள்ள இந்த சமூக தாக்கம் நாட்டின் பிறபகுதிகளின் கவனத்தை இன்னும் ஈர்க்கவில்லை. ஆனால், இது அடிமட்டநிலையிலிருந்து முன்னேற்றத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட மிகப்பெரிய அடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in