Published : 04 Dec 2021 06:14 PM
Last Updated : 04 Dec 2021 06:14 PM

இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்க முடியும்: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி

இளைஞர்களை மேம்படுத்துவதிலும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்க முடியும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்திய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளர்களின் சங்கத்துடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தித் துறை ஏற்பாடு செய்திருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்க உரை ஆற்றினார். அவர் கூறியதாவது:

உலோக உபகரணங்களை தயாரிப்பில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜெர்மனியின் மிட்டெல்ஸ்டாண்ட் போன்ற தொழில்துறை தளத்தை இந்தியாவில் உருவாக்க சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உலகப் புகழ்பெற்ற தொழில்துறை தளத்தை இந்தியாவில் உருவாக்க முடியும்.

சிறிய அளவில் தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதன் மூலம் பெரிய நிறுவனங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆதரிக்கின்றன என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.

இளைஞர்களை மேம்படுத்துவதிலும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்க முடியும். இந்தியா விரைவில் இந்திய ஆயுதப் படைகளுக்கு மட்டுமன்றி , உலகிற்கும் அதிநவீன தொழில்நுட்ப வழங்குநராக மாறும்.

தொடர்ந்து மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இத்துறையில் தற்சார்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. இந்தத் துறையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்களது முழு திறனையும் கட்டவிழ்த்துவிட வேண்டிய அவசியம் உள்ளது.

நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் .

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x