Published : 04 Dec 2021 06:07 PM
Last Updated : 04 Dec 2021 06:07 PM

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: எண்ணிக்கை 3 ஆனது

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர், மற்றொருவர் 66 வயதானவர்.

ஒமைக்ரான் பாதிப்பு எவ்வாறு இருக்கும், வேகமாகப் பரவுமா, உயிரிழப்பை அதிகம் ஏற்படுத்துமா என்பது குறித்து இதுவரை எந்த இறுதியான தகவலும் இல்லை.

இந்நிலையில் இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவரது மாதிரிகளை, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து இந்தியாவில் ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களையும் தடமறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x