

உருமாறிய கோவிட்-19 ஒமைக்ரான் அதிவேகமாக பரவக்கூடிய புரதம் என்பதால் கவலையளிக்கக் கூடியது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
உலக சுகாதார அமைப்பால் 26 நவம்பர், 2021 அன்று ஒமைக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள, உருமாறிய புதிய வகை கோவிட்-19 குறித்து அடிக்கடி எழுப்பப்படும் வினாக்களுக்கான விடைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த முழுமையான தகவல்கள் https://www.mohfw.gov.in/pdf/FAQson Omicron.pdf என்ற தளத்தில் உள்ளன.
இது சார்ஸ் – கோவ்-2-வின் உருமாறிய புதிய வகை ஆகும், இது அண்மையில் தென்னாப்பிரிக்காவின் 24 நவம்பர் 2021 அன்று கண்டறியப்பட்டு B.1.1.529 அல்லது ஒமைக்ரான் (கிரேக்க எழுத்துக்களின் அகர வரிசைப்படி ஆல்ஃபா, பீட்டா, டெல்டா போன்றவற்றின் அடிப்படையில்) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த உருமாற்றம் மிக அதிக எண்ணிக்கையில் உருமாற்றம் அடைந்திருப்பதுடன், குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட அதிவேகமாக பரவக்கூடிய புரதம் என்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி அழிக்கும் தன்மை பெற்றதாகும்.
ஒமைக்ரான் உருமாற்றம் குறித்த தொகுப்பு, முன்பு, தொற்று அதிகரிப்பு மற்றும் / அல்லது நோய் எதிர்ப்பு சக்தி ஒழிப்புடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்ததால், ஒமைக்ரான், கவலை அளிக்கத்தக்க உருமாற்றம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.