மன்னிப்பு கேட்க விரும்பாத எம்.பி.க்கள்: மாநிலங்களவையில் பியூஷ் கோயல் கேள்வி

மன்னிப்பு கேட்க விரும்பாத எம்.பி.க்கள்: மாநிலங்களவையில் பியூஷ் கோயல் கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: மாநிலங்களவையில் மேஜையின் மீது ஏறி கோஷமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரையும் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று விவாதம் எழுந்தது. அப்போது மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசுவதற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரை நான் அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார்கள். கடந்த நவம்பர் 30-ம் தேதி நேரமில்லா நேரத்தின்போது அவர் 5 நிமிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேச வாய்ப்பளித்தேன். இந்த பிரச்சினையை அனைவரும் ஒருங்கிணைந்து தீர்க்க முடியும் நான் நம்புகிறேன்” என்றார்.

இதையடுத்து அவை முன்னவர் பியூஷ் கோயல் பேசும்போது, ‘‘ சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்புக் கேட்க முன்வராத போது அவையில் எப்படி நல்லிணக்கம் உருவாகும். எதிர்க்கட்சிகள் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்.இதே அவையில் நானும் பல விவகாரங்களில் மன்னிப்புக் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்கும் போது அவர்களும் மன்னிப்புக் கேட்கலாமே’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in