

கரும்பு விவசாயிகளுக்கு நியாய மாக கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை பெற்றுத்தராமல், சர்க்கரை ஆலை உரிமையாளர் களுக்கு ஆதரவாக கர்நாடக மாநில அரசு செயல்படுகிறது.
இந்த துரோகத்தை அரசு உடனடியாக நிறுத்தாவிடில் மாநிலம் முழுவதும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடு வோம் என கர்நாடக மாநில விவ சாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கரும்பிற்கு உரிய விலை நிர்ணயிக்க கோரி யும், நிலுவையில் உள்ள தொகையை வழங்கக்கோரியும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வரு கின்றனர். தற்போது இப்பிரச் சினையை எதிர்க்கட்சிகள் சட்ட மன்றத்தில் எழுப்பி வருவதால் மாநில அரசிற்கு நெருக்கடி ஏற் பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் சார்பாக பெங்களூர், மைசூர், மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் அரசிற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் செவ்வாய்க் கிழமை பெங்களூரில் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் போது, ‘சர்க்கரை ஆலை உரிமையாளர் களுக்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுகிறது' என்று கரும்பு விவசாயிகள் குற்றம்சாட்டினர். அதனை மறுத்த சித்தராமையா, ‘அரசு அவ்வாறு செயல்பட வில்லை. கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற் கப்படும்' என தெரிவித்தார். அதே நேரத்தில் நிலுவைத் தொகையை வழங்கும் தேதியை அறிவிப்பதில் உறுதியான முடிவுகள் எடுக்கப் படாததால் புதன்கிழமையும் பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளின் கசந்த வாழ்க்கை
பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக மாநில விவ சாயிகள் சங்க பிரதிநிதி நஞ்சுண்டப்பா, ‘தி இந்து' செய் தியாளரிடம் கூறுகையில், ''கடந்த ஆண்டு கரும்பு டன்னுக்கு ரூ. 2,500 என அரசு நிர்ணயம் செய்தது. குறைவான விலையை கண்டித்து மாநிலம் முழுவதும் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கடந்த ஆண்டு பெல் காமில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, கரும்பு விவசாயி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கரும்பு விலையை டன்னுக்கு ரூ. 2,650 ஆக உயர்த்தி அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் அந்த விலையை வழங்க மறுக் கின்றனர். தொடர்ந்து டன்னுக்கு ரூ.2,000 மட்டுமே வழங்குகின்ற னர். நிலுவையில் இருக்கும் மீதிப் பணத்தை வழங்காமல் இழுத் தடித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்திய போதும் அரசு பொருட்படுத்தவில்லை. காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பா.ஜ.க. அரசாக இருந்தாலும் விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுகிறது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை கசந்து போய் இருக்கிறது.
அரசியல்வாதிகளே ஆலை உரிமையாளர்கள்
சர்க்கரை ஆலை உரிமையாளர் கள் மீது அரசு நடவடிக்கை எடுக் காமல் இருப்பதற்கு முக்கிய காரணம், கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் அரசியல்வாதி களாக இருக்கின்றனர். சிலர் எம்.எல்.ஏ.க்களாகவும், எம்.பி.க்களா கவும் இருக்கிறார்கள். சில ஆலை உரிமையாளர்கள் அமைச்சர்களாக இருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறது.
இதனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கரும்பு விவசா யிகள் நஷ்டமடைந்து, விவசா யத்தை வெறுத்து வெளியேறுகின்ற னர். அரசின் உத்தரவுக்கு கட்டுப் படாத சர்க்கரை ஆலை உரிமை யாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மாநிலம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம்''என்றார்.