

தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது, சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச அரசின் பொறுப்பாகும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
சுகாதாரம், மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ரொக்கமில்லா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சைக்கு இணையான சிகிச்சையளிக்க, நோயாளிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பது உட்பட தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது, சம்பந்தப்பட்ட மாநிலம், யூனியன் பிரதேச அரசின் பொறுப்பாகும்.
இதில் மத்திய அரசு தலையிடுவதில்லை. இதுபோன்ற நடைமுறைகளில் கட்டுப்படுத்தி, தடுக்கத் தேவையான நடவடிக்கைகளையும் மாநிலங்களே மேற்கொள்ள வேண்டும்.
எனவே, இது தொடர்பான புகார்கள் ஏதும் வரப்பெற்றால், அவை உரிய மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட மாநிலகள் அல்லது யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.