ஹஜ் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு தகவல்

ஹஜ் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

சவுதி அரேபியாவின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப ஹஜ் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

2022 ஹஜ் பயணத்துக்கான வழிகாட்டுதல்கள் இந்திய ஹஜ் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று காரணமாக, சவுதி அரேபியாவின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, இந்தாண்டு புதிய தற்காலிக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹஜ் யாத்திரைக்கான ஒதுக்கீடு கடந்த 2019ம் ஆண்டில் 2,00,000-மாக அதிகரிக்கப்பட்டது. கோவிட் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் யாத்திரைக்கு சர்வதேச யாத்திரிகளை சவுதி அரேபிய அனுமதிக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in