Last Updated : 02 Dec, 2021 07:55 PM

 

Published : 02 Dec 2021 07:55 PM
Last Updated : 02 Dec 2021 07:55 PM

நாடாளுமன்றத்தில் அணை பாதுகாப்புச் சட்டம் நிறைவேறியது

நாடாளுமன்றம் | பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

நாடு முழுவதும் உள்ள அனைத்து அணைகளின் கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு, பராமரிப்பு மற்றும் அணை பாதுகாப்புக்கான தேசியக் குழுவை அமைப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் பதிலுக்குப் பிறகு அணை பாதுகாப்பு மசோதா, 2019 நிறைவேற்றப்பட்டது. இது முன்னதாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அணை பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யும்போது ''இந்த மசோதா மாநிலங்களின் அதிகாரத்தை மீறுகிறது'' என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்தனர். விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர், கூறி எதிர்க்கட்சிகளின் அச்சத்தை போக்கும்விதமாக இந்த மசோதாவில் நிலைக்குழுவின் ஆலோசனைகள் அடங்கியுள்ளதாக கூறினார்.

அணைப் பாதுகாப்பு மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய ஷரத்துக்கள்:

அணை உடைப்பு தொடர்பான பேரழிவுகளைத் தடுப்பதற்கும் அணை பாதுகாப்புத் தரத்தைப் பேணுவதற்கும் அணை பாதுகாப்புக்கான தேசியக் குழுவின் சட்டதிட்டங்களை இந்த மசோதா வழங்குகிறது.

அணை பாதுகாப்புக்கான தேசியக் குழு, அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதோடு, அதற்கு தேவையான விதிமுறைகளை பரிந்துரைக்கிறது.

அணை பாதுகாப்பு மசோதா, குறிப்பிட்ட அணைகளின் முறையான கண்காணிப்பு, ஆய்வு மற்றும் பராமரிப்புக்கான கொள்கை, வழிகாட்டுதல்கள் மற்றும் அணைகளின் தரநிலைகளை செயல்படுத்துவதற்கும், இரு மாநிலங்களின் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு குழுக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் தீர்வு காணவும், மாநில அணை பாதுகாப்பு அமைப்புக்கும் மாநில அரசுக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் தீர்வு காண்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக நிறுவுவதற்கு இச்சட்டம் அணை பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்கி, தேவைப்படும் விதிமுறைகளை பரிந்துரைக்கும்.

மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களுக்கான சாத்தியமான காரணங்களை கண்டறிந்து அகற்றுவதற்கு மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் பங்கையும் இது நிறைவேற்றும்.மாநில அரசுகளால் உருவாக்கப்படும் அணை பாதுகாப்புக்கான மாநிலக் குழுவின் அமைப்புக்கான சட்டவிதிகளையும் இந்த மசோதா வழங்குகிறது.

ஒரு குறிப்பிட்ட அணையின் ஒவ்வொரு உரிமையாளரும் அத்தகைய அணைகளின் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட செயல்பாட்டு மற்றும் பராமரிப்பை நிறுவ வேண்டும் மற்றும் அணை பாதுகாப்புக்கான தேசியக் குழுவால் குறிப்பிடப்பட்ட இடைவெளியில் இடர் மதிப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பு, அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குறிப்பிட்ட அணைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை நிரந்தர கண்காணிப்பு, ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு மற்றும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய மற்றும் பாதிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு அணையையும் வகைப்படுத்த வேண்டும்.

இவ்வாறாக முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x