

கேபிள் நெட்வொர்க் விதிகள்-2104-ல் தெரிவிக்கப்பட்டுள்ள “தேசவிரோத மனநிலை” என்றால் என்ன என்று முறையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழப்பியுள்ளது.
இந்த ஒரு வார்த்தையை வைத்து தேவையில்லாமல் தனியார் சேனல்களை துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு செயல்பட்டு வருகிறது.
ஊடகங்களுக்கான நெறிமுறைகள் குறித்து தனது 27-வது அறிக்கையை தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ளது. அந்த குழு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் தேசவிரோத மனநிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அதில் “கேபிள் நெட்வொர்க் விதிகள்-2104ல் தெரிவிக்கப்பட்டுள்ள “தேசவிரோத மனநிலை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வார்த்தைக்கு முறையாக விளக்கம் தேவை. அந்த வார்த்தையில் குழப்பமான அர்த்தம் நிலவினால் அதை நீக்குவது அவசியம். இந்த வார்த்தையின் மூலம் தனியார் சேனல்கள் தேவையில்லாத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
“கேபிள் நெட்வொர்க் விதிகள்-2104ல் 6(1) இ பிரிவின்படி, எந்த நிகழ்ச்சியும் வன்முறையை தூண்டுவதுபோலவோ அல்லது சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைப்பது போலவோ, தேசவிரோத மனநிலையை உருவாக்குவதுபோலவோ இல்லை.
1994ம் ஆண்டு கேபிள் டிவி விதிகளின்படி, தேசவிரோத மனநிலை என்பது சரியாக வரையறுக்கப்பட வேண்டும். தேச விரோதம் என்பது, பொதுவாக தேச நலன்கள் அல்லது தேசவாதத்துக்கு எதிராக என்று பொதுவாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று அமைச்சகம் நியாயப்படுத்தியுள்ளது.
இந்த தேசவிரோதம் என்ற வார்த்தை தேைவயில்லாமல் தனியார் சேனல்களை துன்புறுத்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால் எந்தவிதமான குழப்பமும் இன்றி வரையறுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.