Last Updated : 02 Dec, 2021 03:06 AM

 

Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM

இபிஎஸ் – ஓபிஎஸ் வசமுள்ள அதிமுக அதிகாரத்தை திரும்பப் பெற வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்தில் வா.புகழேந்தி புகார்

வா.புகழேந்தி

புதுடெல்லி

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளிக்கப் பட்ட இரட்டை இலையுடனான அதிமுக அதிகாரத்தை திரும்பப் பெறக் கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி வா.புகழேந்தி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவினர் 2 அணிகளாகப் பிரிந்தனர். அக்கட்சி பிளவுபடும் சூழலுக்கு உள்ளானது. இதன் மீது தலைமை தேர்தல் ஆணையத் திலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதன் முடிவில், கடந்த பிப்ரவரி 2017-ல்தலைமை தேர்தல் ஆணையம், மறைந்த அஇஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வகையறாவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.

இதை ரத்து செய்வதுடன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுகவினர், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக முன்னாள் நிர்வாகி வா.புகழேந்தி நேற்று புகார் அளித்தார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அவர் கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையானது கட்சியின் ஆட்சிமன்ற குழுவினை கூட்டுவது இல்லை. அதிமுகவின் சட்டவிதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர். இதேபோல், இரண்டு மாநிலங்களவை பதவிகளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்வாசன் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் வழங்கியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க சிவில் நீதிமன்றம் நடத்தி வரும் சசிகலா மற்றும் மறைந்த வெற்றிவேல் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்பவர் வி.கே.சசிகலா கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பை தவறாக பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

அதே நேரத்தில், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போதுஅவர் ஜாமீனில் இருக்கிறார். இதுபோல, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி என்பவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளராக தொடர்ந்து செயல்படுகிறார்.

அவர் தேர்தலில் நிற்க முடியாதசூழல் ஏற்பட்டதால் அவரது மனைவியை இரண்டு முறை நிறுத்தி அவரே பிரச்சாரம் செய்கிறார். இவ்வாறு, நீதிமன்றங்களில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடவும், கழகத்தின் உயர்ந்த பதவியில் இருப்பதற்கும் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு எதிராக அனுமதி வழங்கியுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளாஆகிய மாநிலங்களின் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது இதுபோன்ற செயல்பாடுகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராக பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் கட்சியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இரட்டை இலைச் சின்னம் மற்றும் அதிமுகபெயரினை பயன்படுத்த அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்யக் கோரியுள்ளேன். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x