Published : 01 Dec 2021 16:04 pm

Updated : 01 Dec 2021 16:04 pm

 

Published : 01 Dec 2021 04:04 PM
Last Updated : 01 Dec 2021 04:04 PM

வர்த்தக பயன்பாடு சமையல் கியாஸ் விலை 2-வது மாதமாக உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்

rahul-gandhi-attacks-centre-over-inflation-lpg-price-hike
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி

வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து 2-வது மாதமாக அதிகரித்துள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100.50 எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த மாதம் 1-ம் தேதி வர்த்தக சிலிண்டர் விலை ரூ.266 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ.100.50 அதிகரித்துள்ளது.

அக்டோபர் 1-ம் தேதி வர்த்தக சிலிண்டர் விலை ரூ.43 உயர்த்தப்பட்டு, பின்னர் 6ம் தேதி ரூ.2.50 குறைக்கப்பட்டது. செப்டம்பர் 1-ம் தேதி வர்தத்க சிலிண்டர் விலை ரூ.75 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ,10 கிலோ, 5 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இதன் விலை ரூ.899.50 என இருக்கிறது.

கடந்த 2012-13-ம் ஆண்டுக்குப்பின் வர்த்தக சிலிண்டர் விலை ஒன்று ரூ.2,100-க்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த மாதமும் உயர்த்தப்பட்டநிலையில் 2-வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் இடையிலான விலை 1,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “ பணவீக்கம் அதிகரிக்கிறது, வார்த்தை ஜாலங்களின் உணர்வுகள் வீழ்ச்சி அடைந்தன” எனத் தெரிவித்துள்ளார். ப்ரைஸ்ஹைக், எல்பிஜி என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

தவறவிடாதீர்!

CongressCongress leader Rahul GandhiRising inflation.LPG price hikeAttack on the CentreSentiments of the rhetoric fellCommercial cylinderDomestic cylindersவர்த்தக சிலிண்டர்விலை உயர்வுவீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்காங்கிரஸ்ராகுல் காந்திசமையல் கியாஸ் சிலிண்டர்#LPG#Pricehike

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x