Last Updated : 01 Dec, 2021 04:04 PM

 

Published : 01 Dec 2021 04:04 PM
Last Updated : 01 Dec 2021 04:04 PM

வர்த்தக பயன்பாடு சமையல் கியாஸ் விலை 2-வது மாதமாக உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்

வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து 2-வது மாதமாக அதிகரித்துள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100.50 எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த மாதம் 1-ம் தேதி வர்த்தக சிலிண்டர் விலை ரூ.266 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ.100.50 அதிகரித்துள்ளது.

அக்டோபர் 1-ம் தேதி வர்த்தக சிலிண்டர் விலை ரூ.43 உயர்த்தப்பட்டு, பின்னர் 6ம் தேதி ரூ.2.50 குறைக்கப்பட்டது. செப்டம்பர் 1-ம் தேதி வர்தத்க சிலிண்டர் விலை ரூ.75 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ,10 கிலோ, 5 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இதன் விலை ரூ.899.50 என இருக்கிறது.

கடந்த 2012-13-ம் ஆண்டுக்குப்பின் வர்த்தக சிலிண்டர் விலை ஒன்று ரூ.2,100-க்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த மாதமும் உயர்த்தப்பட்டநிலையில் 2-வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் இடையிலான விலை 1,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “ பணவீக்கம் அதிகரிக்கிறது, வார்த்தை ஜாலங்களின் உணர்வுகள் வீழ்ச்சி அடைந்தன” எனத் தெரிவித்துள்ளார். ப்ரைஸ்ஹைக், எல்பிஜி என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x