Published : 07 Mar 2016 10:04 am

Updated : 07 Mar 2016 10:04 am

 

Published : 07 Mar 2016 10:04 AM
Last Updated : 07 Mar 2016 10:04 AM

கேரள சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் காங். - இடதுசாரி - பாஜக இடையே கடும் போட்டி

கேரள சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரி கூட்டணி - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி (யுடிஎப்) ஆட்சி உள்ளது. இந்த தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி வியூகங்களை வகுத்துள்ளது. ஏனெனில், கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால், கேரள சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸுக்கு மிக முக்கியமாக உள்ளது.

அதேபோல், மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத நிலையில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி மம்தாவிடம் தோற்று போனது. கேரளாவிலும் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது. எனவே, இந்தத் தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி (எல்டிஎப்) கட்சிகள் செயலாற்றி வருகின்றன.

கேரளாவை பொறுத்தவரை யுடிஎப் அல்லது எல்டிஎப் கூட்டணி களே மாறி மாறிஆட்சி செய்து வருகின்றன. இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை பாஜக கைப்பற்றி அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும், இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க முடியாத நிலை பாஜக.வுக்கு இருந்தது.

ஆனால், இந்த தேர்தலில் பாரத் தரம் ஜன சேனா கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இதன் பொதுச் செயலாளராக வேலபள்ளி நடேசன் பதவி வகிக்கிறார்.  நாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ்என்டிபி) என்ற அமைப்பு பாரத் தரம் ஜன சேனா கட்சியை புதிதாக தொடங்கி உள்ளது. இந்த அமைப்பு கேரளாவில் செல்வாக் குள்ள பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூக மக்களின் நலனுக்காக தொடங் கப்பட்டுள்ளது. அதனால் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு பாஜக கூட்டணி கடும் சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் எதிலும் ஒரு இடங்களில் கூட பாஜக இதுவரை வென்ற தில்லை. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களை கைப் பற்றியதன் மூலம், கேரளாவில் காலடி வைக்க பாஜக மும்முரமாக உள்ளது.

மேலும், சூரிய சக்தி தகடு மோசடி, பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றது போன்ற பல புகார்கள் ஆளும் காங்கிரஸுக்கு எதிராக உள்ளன. கேரள சட்டப் பேரவை உறுப்பினர்களின் எண் ணிக்கை 140. இவற்றில் 72 இடங் களை கைப்பற்றி யுடிஎப் கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. எல்டிஎப் 68 இடங்களில் வெற்றி பெற்றது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கேரள சட்டப்பேரவை தேர்தல்காங்கிரஸ்இடதுசாரிபாஜககடும் போட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author