தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: வட மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: வட மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
Updated on
2 min read

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் கடல் பகுதியில் இருந்த மர்ம படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இதில் வந்த தீவிரவாதிகள் குஜராத்துக்குள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ் தானின் லஷ்கர்-இ-தொய்பா அல்லது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேர் குஜராத் எல்லை வழியாக ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பாது காப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில காவல் துறை தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கை

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தீவிரவாதிகள் டெல்லியிலோ அல்லது சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களிலோ தாக்குதல் நடத்தலாம் எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, தேசிய பாது காப்புப் படையைச் சேர்ந்த 120 கமாண்டோ குழுவினர் குஜராத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர். முன் எப்போதும் இல்லாத வகையில் குஜராத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் முதல்வர் ஆய்வு

சிவராத்திரி கொண்டாடப் படுவதால் சிவன் கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் உயர் நிலைக்குழு கூட்டத்தைக் கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதுபோல, டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தேகப் படும்படியான நபர்களை கண் காணிக்குமாறு அனைத்து துணை ஆணையர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள், சந்தைப் பகுதிகள் உட்பட முக்கிய பகுதி களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்குகிறதா என்பதை உறுதி செய்யுமாறும் தீவிரமாக கண் காணிக்குமாறும் உத்தரவிடப்பட் டுள்ளது. போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் எங்காவது தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தினால் அதை முறியடிப்பதற்கு ஏதுவாக, தேசிய பாதுகாப்புப் படை குழுக்கள் டெல்லி அருகே மானேசரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.

ராஜ்நாத் ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி, உளவுத்துறை இயக்குநர் தினேஷ்வர் சர்மா உள்ளிட்ட பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தாக்குதலை எதிர்கொள்வதற்காக குஜராத் மாநிலத்தில் தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) 4 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச் சரிடம் எடுத்துரைக்கப்பட்டது. தேவைப்பட்டால் வேறு பகுதிகளுக்கும் செல்ல அவர்கள் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், மாநகரங்கள், வழிபாட்டு தலங்கள், தொழிற்சாலை பகுதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in