

புதிய வகை உருமாறிய கரோனா குறித்து நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிபுணர்வுடனும் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையாட்டி அவை நடவடிக்கைளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை நாடாளுமன்றம் வந்தார். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த கூட்டத்தொடர் முக்கியமானதாகும். மிகமுக்கியமான கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால் நாடாளுமன்றத்தை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும்.
எதிர்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 150 கோடி டோஸ் தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம். புதிய உருமாறிய கரோனா குறித்து நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். அடுத்தாண்டு மார்ச் வரை இலவச ரேசன் பொருள் வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.