நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்: எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்: எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை
Updated on
1 min read

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில் இரு அவைகளிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தின.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல்நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே அனைத்து எம்.பி.க்களையும் முதல்நாளில் வர வேண்டும் என்று பாஜக கொறடாமூலம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோலவே கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் கரன்ஸியை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோாதா, திவால் சட்டத்தில் 2-வது திருத்த மசோதா, மின்சாரத் திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது

இதனால் அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் எம்.பி.க்கள் தவறாது இன்று அவைக்கு வர வேண்டும் என கொறடா மூலம் உத்தரவி்ட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது தொடர்பாகவும், மக்கள் விரோத மசோதாக்கள் தாக்கல் செய்யாமல் தடுப்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in