Published : 29 Nov 2021 03:05 AM
Last Updated : 29 Nov 2021 03:05 AM

பழைய துரோகங்களை மறந்து பிபின் ராவத்தை சாடும் சீனா!

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத்தை கடந்த சில தினங்களாக சீனா கடுமையாக விமர்சித்து வருகிறது. பிபின் ராவத்தின் கருத்துகள் இந்தியா – சீனா இடையேயான உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் அந்நாடு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அப்படி சீனாவை கோபப்படுத்தும் அளவுக்கு பிபின் ராவத் என்ன கருத்து தெரிவித்துவிட்டார்? ஒன்றுமில்லை. கடந்த வாரம் நடைபெற்ற ராணுவ உயரதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிபின் ராவத், அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு குறித்தும், முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டிய விவகாரங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.

அப்போது, இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா உருவெடுத்துள்ளதாக பிபின் ராவத் கூறினார். அவரின் இந்தக் கருத்துதான் சீனாவைகொந்தளிக்கச் செய்துள்ளது. இந்தியாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லாதது போலவும், பிபின் ராவத் மூலம்தான் பிரச்சினை ஏற்படப் போகிறது என்பது போலவும் சீன ராணுவ செய்தித்தொடர்பாளர் வூ குயான் நேற்று முன்தினம் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இப்படியொரு அப்பாவி நாட்டையா பிபின் ராவத் சீண்டி வருகிறார் என கேட்டால், ‘இல்லை’ என்றே பதில் வரும். இந்தியாவுடனான உறவில் தொடக்கம் முதலே பல துரோகங்களை செய்து வரும் நாடு சீனா என்பதை அந்த நாடு வேண்டுமானால் மறந்து விடலாம். ஆனால், இந்தியாவால் அவ்வளவு எளி தாக துரோகத்தை மறந்துவிட முடியாது.

1950-களில் இந்தியாவுடன் திடீரென நெருங்கிய நட்பு பாராட்டிய சீனா, யாருக்கும் தெரியாமல் இந்தியாவின் ஒரு பகுதியான அக்சய் சின்னை ஆக்கிரமித்து சாலை அமைத்தது. இப்போது வரைஅக்சய் சின் விவகாரம் அடங்கிவிடவில்லை. அதேபோல, இந்திய எல்லைக்கு உட்பட்ட இமயமலை தொடரின் சில பகுதிகளை கைப்பற்ற 1962-ல் நம்முடன் போரிட்டது சீனா. அதன் பிறகு தொடர்ச்சியாக (இப்போது வரை) அருணாச்சலப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறது.

இதற்கு நடுவில், பூடான் அருகே உள்ள டோக்லாமை கைப்பற்ற 2017-ல் ஒரு போர் சூழலை அந்நாடு உருவாக்கியது. இவை எல்லாம் போதாதென்று, தற்போது இந்தியாவின் லடாக் எல்லை மீது தனது பார்வையை திருப்பியுள்ளது சீனா. அங்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், இலங்கை, பூடான் என இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் தனது ராணுவப் படை தளங்களை சீனா அதிகரித்து வருகிறது.

இவ்வாறு வரலாறு முழுவதும் நம்பிக்கை துரோகங்களை செய்தும், அராஜப்போக்கை கடைப்பிடித்தும் வரும்சீனாவை, இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் என பிபின் ராவத் கூறியதில் என்னதவறு இருக்கிறது? வாஜ்பாய் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸும் சீனாவை இந்தியா வுக்கு அச்சுறுத்தலான நாடு என்றே கூறினார். தற்போது அதே கூற்றை பிபின் ராவத் கூறியிருக்கிறார். இதற்கு சீனா கோபப்படுவதில் நியாயம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x