Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

சுற்றுலாவை மேம்படுத்த எடுத்த நடவடிக்கையால் பிரதமருக்கு இசையால் நன்றி கூறிய மேகாலயா ‘விசில் கிராம’ மக்கள்

மேகாலயாவில் உள்ள ஒரு கிராமத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சிக்காக பிரதமர் மோடியை வாழ்த்தியும் நன்றி தெரிவித்தும் இயற்றப்பட்ட பாடலுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மேகாலயாவில் இயற்கை எழில் சூழ்ந்த காங்தாங் என்ற கிராமத்தை ஐ.நா.சபையின் உலகசுற்றுலா அமைப்பின் போட்டிக்காக மத்திய அரசு சமீபத்தில் முன்மொழிந்தது. தங்கள் கிராமத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சிக்காக காங்தாங் கிராமமக்கள் வித்தியாசமான முறையில்பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித் துள்ளனர். அந்த கிராமத்தில் மரபுப்படி பாரம்பரியமாக கிராமத் தில் பிறக்கும் குழந்தைக்கு அக் குழந்தையின் தாய் பெயரோடு ஒரு தனி இசைக் கோர்வையையும் சூட்டுவார். இந்த இசைக் குறிப்பே அந்தக் குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அடையாளமாகக் கருதப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட இசைக் கோர்வை வேறு எவருக்கும் பெயராக சூட்டப்படுவதில்லை.

இந்த இசை தூரத்தில் இருந்து கேட்கும்போதும் விசில் ஒலி போன்று கேட்பதால் காங்தாங் கிராமம் விசில் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

தங்கள் கிராமத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நடவடிக் கைக்காக பிரதமர் மோடியின் பெயரால் காங்தாங் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மோடியை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் இசைக்கோர்வையை பாடி உள்ளார். அந்தப் பெண் பாடும் வீடியோ காட்சியை மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ட்விட் டரில் பதிவிட்டு வாழ்த்துகளை ஏற்குமாறு மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வீடியோவை தனது ட்வி்ட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். ‘‘இந்த அன்பான செயலுக்காக காங்தாங் கிராம மக்களுக்கு நன்றி. மேகாலயாவின் சுற்றுலா வளத்தை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது’’ என்று ட்விட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x