‘தலாக்’ விவாகரத்து சட்டப்பூர்வமானதா?- ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு- முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

‘தலாக்’ விவாகரத்து சட்டப்பூர்வமானதா?- ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு- முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், மும் முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதில் உள்ள சட்ட உரிமை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷயாரா பானுவின் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கை மும்முறை தலாக் கூறியதன் மூலம் விவாகரத்து ஆனது. இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத் தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம் பெண்களுக்கு ஸ்கைப், ஃபேஸ்புக், எஸ்எம்எஸ் மூலம் ‘தலாக்’ அளிக்கப்படுகிறது. இந்த ஒருதலைப்பட்சமான விவா கரத்துக்கு எதிராக பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. எல்லையற்ற அதிகாரம் கொண்ட முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டால், அப்போது முஸ்லிம் பெண்களின் கைகள் கட்டப்பட்டு விடுகின்றன.

மத அதிகாரிகள், இமாம்கள், மவுல்விகள் போன்ற மதத் தலைவர்கள், தலாக் மற்றும் பலதார மணத்தைச் செய்துவைக் கும் அதிகாரம் கொண்டவர்கள். இவர்கள் தங்களின் அதிகாரம் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். முஸ்லிம் பெண்கள் இவர்களால் ஓர் உடமைப் பொருளாக பயன்படுத் தப்படுகின்றனர். எனவே, இந் நடைமுறைகள் சமத்துவம், வாழ் வதற்கான உரிமைக்கு எதி ரானவை. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர், நீதிபதி யு.யு.லலித் ஆகியோரடங்கிய அமர்வு இதனை விசாரித்தது. அப்போது, ஷயாரா பானு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் சிங் சத்தா, “கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, ‘பெண்களும் சட்டமும்: திருமணம், விவா கரத்து, காவல், சொத்துரிமை, வாரிசு ஆகியவை தொடர்பான குடும்பச் சட்டங்கள் ஓர் பார்வை’ என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்ய, உயர்நிலைக் குழுவை அமைத்தது. அக்குழு, மகளிர் மற்றும் குழந்தை கள் நல அமைச்சகத்திடம் அறிக் கையைச் சமர்ப்பித்துள்ளது. அந்தக் குழு, பலதார மணம், ஒரு தலைப்பட்சமான தலாக் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய் துள்ளது” எனத் தெரிவித்தார்.

“ஷயாரா பானுவின் மனு தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தை ஆறு வாரங்களுக் குள் சமர்ப்பிக்க வேண்டும். அக்குழுவின் அறிக்கையை யும் சமர்ப்பிக்க வேண் டும்” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

மேலும், தேசிய மகளிர் ஆணை யத்தின் வழக்கறிஞர் அபர்ணா பட், ஷயாராவின் முன்னாள் கணவர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கோரியுள்ளது.

எதிர்ப்பு

தலாக்கின் சட்ட உரிமையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருப்பதற்கு, அனைத் திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜமியத் இ உலாமா ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in