Published : 28 Nov 2021 03:38 PM
Last Updated : 28 Nov 2021 03:38 PM

ஓமைக்ரான் அச்சம்: கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணியுங்கள்: மாநிலங்களுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை


கரோனா வைரஸின் உருமாற்றமான ஓமைக்ரான் வைரஸ் குறித்து உலக நாடுகள் அஞ்சி வரும் நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அ ரசு எச்சரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பரிசோதனை தீவிரப்படுத்தி, கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாலர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மாநிலஅரசுகள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்டபகுதிகளில் கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை தொடர்்ந்து கண்காணிக்க வேண்டும். கவலைதரும் உருமாற்ற கரோனா வைரஸான ஓமைக்ரான் பாதிப்புள்ள நாடுகள் குறித்த பட்டியலை ஏற்கெனவே மத்திய அரசு அடையாளம் கண்டு அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கூடுதல் விழிப்புடன், தடுப்பு நடவடிக்கைகளுடன் கண்காணிக்க வேண்டும்.

இந்த புதிய உருமாற்ற வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக தெரியவந்துள்ளது. போட்ஸ்வானா, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா தவிர்த்து, பிரி்ட்டன், ஆஸ்திரேலியா, செக் குடியரசு, இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் உருமாற்ற வைரஸ் பரவிவிட்டது.

ஆதலால், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து கண்காணிப்பை வேகப்படுத்த வேண்டும், அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும். சர்வதேச பயணிகளிடம் இருந்து பெறப்படும் மாதிரிகள், மரபணு பரிசோதனைக்காக உரிய அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சில மாநிலங்களில் கரோனா பரிசோதனை அளவு குறைந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் பரிசோதனை அளவை அதிகப்படுத்த வேண்டும், குறிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனை அளவு குறையும்போது, நோயின் பரவல், தீவிரத்தன்மையை கண்டறிவது கடினம். ஆதலால், பரிசோதனைக்கான கட்டமைப்பு வசதிகளை மாநிலங்கள் தயார் செய்து மேம்படுத்தி, மத்திய அரசின் பரிசோதனை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கரோனா ஹாட் ஸ்பாட் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளை மாநில அரசுகல் தொடர்ந்து கண்காணி்க்க வேண்டும். ஹாட் ஸ்பாட்களில் கரோனா பரிசோதனை மேம்படுத்துதல், உருவாக்குதல், மாதிரிகளை எடுத்து விரைவாக மரபணு பிரசோதனைக்கு அனுப்புதலை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். கரோனா பாஸிட்டிவ் விகிதத்தை மாநில அரசுகள் 5 சதவீதத்துக்கு கீழாக வைத்திருக்க வேண்டும்
இ்வ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x