நக்சல்கள் கண்ணிவெடியில் சிக்கி சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் வீரர்கள் 7 பேர் பலி

நக்சல்கள் கண்ணிவெடியில் சிக்கி சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் வீரர்கள் 7 பேர் பலி
Updated on
1 min read

ஆயுதங்களும் கொள்ளையடிக்கப்பட்டதால் பதற்றம்

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சல் தீவிரவாதிகள் நிலக்கண்ணி வெடியை வெடிக்கச் செய்து மத்திய ரிசர்வ் படை வீரர் கள் 7 பேரை படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மேலும் வீரர்களின் ஆயு தங்களையும் நக்சல் தீவிரவாதி கள் கொள்ளையடித்துச் சென்ற தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் கள் ஆதிக்கம் நிறைந்த தண்டே வாடா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் (சிஆர்பிஎப்) தீவிர நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் மேளவாடா கிராமத்தில் உள்ள பசாரஸ் குவாகொண்டா என்ற பகுதி வழியாக சிஆர்பிஎப் வீரர்கள் 7 பேர் நேற்று வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடியை, நக்சல் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் வீரர்கள் சென்ற வாகனம் பல அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டத்தில் அதில் பயணம் செய்த 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கண்ணி வெடி வெடித்ததில், சாலையின் நடுவே 4 அடி ஆழத்துக்கு பெரும் பள்ளமும் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை அதிகாரி கள், வீரர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 7 பேர் கொண்ட அந்த வீரர்கள் நிர்வாக பணிக்காக அந்த இடத்துக்கு சீருடை அணியாமல் சென்றபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது. தவிர வீரர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங் களையும் நக்சல்கள் அந்தப் பகுதியில் இருந்து கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர். இதனால் தண்டேவாடாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in