தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளில் 2 பேரில் ஒருவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை: ஆய்வில் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிப் பெண்களில் இருவரில் ஒருவர் அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம்தான் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல சர்வேயில் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளின் வசதிகள் பெருகியுள்ளன என்பது தெரியவருகிறது. இந்த மருத்துவ வசதிப் பெருக்கத்தால், அறுவை சிகிச்சை அளவு 40.9 சதவீதத்திலிருந்து 47.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் கடந்த 2014-15ஆம் ஆண்டில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவது 17.2%ஆக இருந்த நிலையில் 2019-20ஆம் ஆண்டில் 21.5% ஆக அதிகரித்துள்ளது

இதன் மூலம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எந்த மருத்துவ வசதியைப் பெற்றாலும் 5 கர்ப்பிணிப் பெண்களில் ஒரு பெண் சிசேரியன் மூலம் குழந்தை பெறுகிறார் என்பது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, “சிசேரியன் மூலம் குழந்தை பெறும் சதீவீதம் 10 முதல் 15% வரை இருப்பது சிறந்த விகிதம்தான். ஏனென்றால், மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் சிசேரியனுக்குச் சென்றதால்தான், பச்சிளங் குழந்தைகள் பிறக்கும்போது இறப்பது குறைந்துள்ளது. ஆனால், 10 சதவீதத்துக்கு அதிகமாகும்போது, இறப்பு வீதமும் அதிகரிக்கும் என்பதற்கு ஆதாரமில்லை.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 10 மகப்பேற்றில், 7 அல்லது 8 பெண்களுக்கு சிசேரியன் மூலமே குழந்தை பிறப்பு இருக்கிறது. மேற்கு வங்கத்தில் 82.7 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 82.1 சதவீதம், தமிழகத்தில் 81.5 சதவீதம், அந்தமான் நிகோபரில் 79.2 சதவீதம், அசாமில் 70.6 சதவீதம் சிசேரியன் மூலமே குழந்தை பிறப்பு இருக்கிறது.

இந்த மாநிலங்களில் கடந்த காலத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவது குறைந்திருந்த நிலையில் தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

அசாமில் 17.3% அதிகரித்து 70.6% உயர்ந்துள்ளது. ஒடிசாவில் 17 சதவீதம் அதிகரித்து, 70.7% ஆகவும், பஞ்சாப்பில் 15.8%லிருந்து 55.5 ஆகவும், தமிழகத்தில் 12.5 சதவீதம் உயர்ந்து 63.8 ஆகவும், கர்நாடகாவில் 12.2 சதவீதம் புள்ளிகள் அதிகரித்து 52.5% ஆகவும் உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்து வருகிறது. ஆனால், இது பெரிய அளவில் இல்லை. கடந்த 2014-15இல் 52.1 சதவீதம் இருந்த நிலையில் 2019-20இல் 61.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொது மருத்துவமனைகளில் சிசேரியன் அதிகரித்த அளவில் சிக்கிம் (12.3%), கோவா (11.6%), சண்டிகர் (10.9%), தமிழகம் (9.7%) அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in