மும்பை தாக்குதலின் 13-ம் ஆண்டு நினைவு தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

மும்பை தாக்குதலின் 13-ம் ஆண்டு நினைவு தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
Updated on
1 min read

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் நட்சத்திர ஓட்டல், டிரிடென்ட் ஓட்டல், நரிமேன் விடுதி உட்பட 8-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்புப் படையினர், வெளிநாட்டினர் உட்பட 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாதுகாப்புப் படையினின் துணிச்சலான நடவடிக்கையால் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் திரும்பி பார்க்க வைத்த மும்பை தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் (நவ.26) 13-ம் ஆண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்பை தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நாடு எப்போதும் நன்றிக் கடன் பட்டிருக்கும்” எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ பதிவில், “மும்பை தாக்குலின் வலியையும், வடுக்களையும் இந்தியா ஒரு போதும் மறக்காது. இந்த தருணத் தில், மும்பை தாக்குதலில் உயிரிழந் தவர்களுக்கு அஞ்சலியும், அவர் களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் தீரத்துடன் போராடி வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையி னருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக புதிய கொள்கையுடன் புதிய வழியில் இன்றைய இந்தியா போராடி வருகிறது. எந்த ரூபத்தில் தீவிரவாதம் வந்தாலும் அதனை இந்தியா வேரறுக்கும்” இவ்வாறு அதில் மோடி கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள அறிக்கையில், “மும்பை தாக்குதல் மிகவும் கோழைத்தனமான செயல். இதில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்பு கொண்டு வரும் வரை இந்தியா ஓயாது” என தெரிவித்துள்ளார்.

பாக். தூதரகத்திற்கு சம்மன்

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் உயரதிகாரியை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று நேரில் அழைத்து மும்பைதாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் மீதான வழக்கை பாகிஸ்தான் அரசு விரைந்து முடித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

முன்னதாக, இந்தியா உள் ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் காரண மாக, மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஹபீஸ் சையது, ஜகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in