கரோனா வைரஸ் தடுப்புக்கான ஐடிசி-யின் ‘நேசல் ஸ்பிரே’ - ஆய்வக சோதனை ஆரம்பம்

கரோனா வைரஸ் தடுப்புக்கான ஐடிசி-யின் ‘நேசல் ஸ்பிரே’ - ஆய்வக சோதனை ஆரம்பம்
Updated on
1 min read

ஐடிசி நிறுவனம் கரோனா வைரஸ் தடுப்புக்கு மூக்கு வழியாக மருந்தை அனுப்பும் ஸ்பிரேயை(நேசல் ஸ்பிரே) உருவாக்கியுள்ளது. இதை பயன்படுத்துவதற்கான ஆய்வக சோதனையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

ஐடிசி நிறுவனத்தின் அங்கமாக பெங்களூருவில் செயல்படும் ஐடிசி லைப் சயின்சஸ் மற்றும்தொழில்நுட்ப மையம் (எல்எஸ்டிசி) நேசல் ஸ்பிரேயை சந்தைப்படுத்த உள்ளது. இந்நிறுவனத்தின் பிரபலமான சாவ்லான் பிராண் டில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்குரிய அனுமதி பெறப்பட்ட பிறகு இது விற் பனைக்கு வரும் எனத் தெரிகிறது.

இது குறித்து விவரம் எதையும் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், ஆய்வக சோதனை நடத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் எப்பகுதியில் ஆய்வக சோதனை நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேபோல வர்த்தக ரீதியிலான உற்பத்தி எங்கு மேற்கொள்ளப்படும், விலை மற்றும் எந்த பிராண்டு பெயரில் வெளியிடப்பட உள்ளது போன்ற விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

பாதுகாப்பான வழிமுறை

இந்தியாவில் ஆய்வக சோதனை பதிவு (சிடிஆர்ஐ) அமைப்பு ஆய்வக சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. மூக்கு வழியாக கரோனா வைரஸ் உள் சென்று பாதிப்பு ஏற்படுத்துவதை இது தடுக்கும் என கூறப்படுகிறது.

கரோனா பரவலைத் தடுக்க வும், பாதுகாப்பான வழி முறை யாக இது இருக்கும் என்று சுகாதாரத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். ஐடிசியின் எல்எஸ்டிசி இதுபோன்று அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த பொருட்களை தயாரிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் சாவ்லான் பிராண்டில் விற்பனையாகும் சுகாதாரம், உடல் நலன் சார்ந்த தயாரிப்புகள் அனைத்தும் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினரால் உருவாக்கப்பட்டவை ஆகும். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in