உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை? - திரிபுராவுக்கு துணை ராணுவ படை அனுப்ப மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை? - திரிபுராவுக்கு துணை ராணுவ படை அனுப்ப மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published on

பாஜக ஆளும் திரிபுராவில் நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களை பாஜகவினர் மிரட்டுவதாகவும், வன்முறையில் ஈடுபடுவதாகவும் எதிர்க்கட்சி களான மார்க்சிஸ்ட், திரிணமூல் குற்றம் சாட்டி வருகின்றன.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “திரிபுராவில் பாஜக வினரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்தி, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என கோரப் பட்டிருந்தது.

இந்த மனுவானது, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்யகாந்த், விக்ரம்நாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது திரிபுரா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி கூறுகையில், “திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மனுதாரர் (திரிணமூல்) தரப்பு தான் இதற்கு இடையூறு செய்கிறது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கர் நாராயணன், “ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களின் வீடியோக்கள் உள்ளன. நீதிமன்றம் அனுமதித் தால் அதனை காட்ட தயார்” எனத் தெரிவித்தார்.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த திரிபுரா அரசு தரப்பு வழக்கறிஞர், “தேர்தலில் பிரச்சினை என்றால் தேர்தல் ஆணையத்தைதான் அரசியல் கட்சிகள் நாட வேண்டும். அதனை விட்டுவிட்டு, உச்ச நீதிமன்றத்திற்கு வரக் கூடாது” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் எந்தப் பகுதியில் நடைபெறும் தேர்தல்களிலும் தலையிட்டு, அவற்றை நியாயமானமுறையில் நடக்க செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள் ளது. திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் வன்முறைகள் நடப்பதாக மனு தாரர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நடைபெறும் வேளையில், புகார்கள் வந்தால் நிதானமாக விசாரிக்க முடியாது. உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்படி, திரிபுராவில் தேர்தல் நடைபெறும் 770 வாக்குச் சாவடி களிலும் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைக்க வேண்டும்.

துணை ராணுவப் படைகள் போதுமானதா என்பதை மாநில காவல் துறை தலைவரும், உள்துறையும் ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால், கூடுதல் வீரர்களை அனுப்பி வைக்க மத்திய அரசிடம் கேட்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in