Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

உள்நாட்டிலேயே நான்காவதாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வேலா கப்பல் கடற்படையில் இணைப்பு: 2022 ஆகஸ்ட்டில் வருகிறது விக்ராந்த் போர்க் கப்பல்

மும்பை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா, இந்திய கடற் படையில் நேற்று இணைக்கப் பட்டது. இந்த கப்பலை கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இயக்கி வைத்தார்.

பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து 6 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் பி-75 திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அதன்படி, ஏற்கெனவே, 3 நீர்மூழ்கிக் கப்பல் கள் தயாரித்து கடற்படையில் இணைக்கப்பட்டுவிட்டன. தற்போது 4-வதாக ஸ்கார்பீன் வகை ஐஎன்எஸ்வேலா நீர்மூழ்கிக் கப்பல் நேற்றுகடற்படையுடன் இணைக்கப்பட்டது. மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், ஐஎன்எஸ் வேலா கப்பலை இயக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

இந்திய கடற்படையின் செயல்பாடுகளை ஐஎன்எஸ் வேலா மேம்படுத்தும். அதே நேரத்தில் இந்திய கடல் பகுதி களின் பாதுகாப்பில் இந்தக் கப்பல் முக்கியபங்காற்றும். நீருக்கு அடியில் கடற்படை மேற்கொள்ளும் அனைத்துவகை நடவடிக்கைகளையும் ஐஎன்எஸ் வேலா பார்த்துக் கொள்ளும் திறன் படைத்தது.

தற்போதுள்ள மாறுபட்ட சிக்க லான பாதுகாப்பு சூழ்நிலையில், இந்திய கடல் பகுதிகள், கடற் படையின் செயல்பாடுகளில் ஐஎன்எஸ் வேலா முக்கிய பங்காற் றும். பி-75 திட்டத்தால் இந்திய - பிரான்ஸ் ஒத்துழைப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இத்திட்டத்தில் பாதியை தாண்டி விட்டோம்.

2022-ல் விக்ராந்த்

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்தாங்கி போர்க் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டுள்ளது. இந்தக் கப்பலின் கடல் சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடற்படையில் விக்ராந்த் போர்க் கப்பல் இணைக் கப்பட்டு விடும்.

சீனா - பாகிஸ்தான் இடையேராணுவ ஒத்துழைப்பு விவகாரங்களை கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சீனாவிடம் இருந்து சமீபத்தில் ராணுவதளவாடங்களை பாகிஸ்தான் வாங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், நாம் மிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். இவ்வாறு கடற்படை தளபதி கரம்பீர் சிங் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்ப லின் கடல் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக நடத்தப்பட்டது. அதன்பின் அக்டோபர் மாதம் விக்ராந்த் போர்க் கப்பலின் கடல் சோதனை ஓட்டம் மீண்டும் நடத்தப்பட்டது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் கொண்டது. மொத்தம் 59 மீட்டர் உயரமுடையது. இதில் 2,300 அறைகள் உள்ளன. மேலும் 1,700 பணியாளர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண் அதிகாரிகளும் தங்கி பணிபுரியும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x