

பிஹார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 72 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 1.6 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதிய உணவில் வாரத்துக்கு ஒரு முறை வெஜிடபிள் பிரியாணி வழங்கப்படும் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சுவையான உணவு கிடைக்கும். அதற்காக புதிய உணவு பட்டியலை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. விரைவில் மதிய உணவில் வெஜிடபிள் பிரியாணி வழங்கப்படும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, மத்திய உணவில் பழங்கள் முட்டை வழங்கப்பட்டு வருகின்றன.