நிருபரை அறைந்ததாக எழுந்த சர்ச்சையை மறுத்த சன்னி லியோன்

நிருபரை அறைந்ததாக எழுந்த சர்ச்சையை மறுத்த சன்னி லியோன்
Updated on
1 min read

"நீங்கள் ஒரு காலத்தில் ஆபாச படங்களில் நடிப்பவராக இருந்திருக்கிறீர்கள். இப்போது படங்களில் நடிக்கிறீர்கள். உங்கள் நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்" என்ற கேள்வி சன்னி லியோனை கோபப்படுத்தி இருக்கிறது.

கடந்த வியாழன்று, சூரத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகையும், முன்னாள் பாலியல் பட நடிகையுமான சன்னி லியோன், நிருபரைப் போலக் கேள்வி கேட்ட ஒருவரை அறைந்ததாக செய்திகள் வெளியாயின.

ஹோட்டலில், ஊடக நபர்களுடன் சன்னி லியோன் பேசிக் கொண்டிருக்கும்போது, இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

''நீங்கள் ஒரு காலத்தில் ஆபாச படங்களில் நடிப்பவராக இருந்திருக்கிறீர்கள். இப்போது படங்களில் நடிக்கிறீர்கள். உங்கள் நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்'' என்று நிருபரைப் போல ஒருவர் கேட்ட கேள்வி, சன்னி லியோனை கோபப்படுத்தியதால் அறைந்ததாக செய்திகள் வெளியானது.

சம்பவத்துக்கு பிறகு, விழா ஏற்பாட்டாளர்களிடம், பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சொல்லி, 'ஹோலி வித் சன்னி லியோன்' நிகழ்ச்சியில் நடனமாடியிருக்கிறார் சன்னி.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களில், சன்னிலியோன் நிருபரை அறைந்ததை மறுத்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால், சன்னி லியோன் தரப்பில், ''சன்னி அவரை அறைந்ததை மறுக்கவில்லை. அவர் ஊடகத்துறை நபர் கிடையாது என்று மறுத்திருக்கிறார்'' என்கின்றனர்.

காவல்துறையில் புகார்?

இது குறித்து, சன்னிலியோன் மூலமாகவோ, விழா ஏற்பாட்டாளர்கள் வழியாகவோ காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

அதே நேரத்தில், சன்னிலியோன் அறைந்தததாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில் செய்தி வெளியான நிலையில், விழா ஏற்பாட்டாளர்களை யாரலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரின் மொபைல்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in