Published : 25 Nov 2021 06:04 PM
Last Updated : 25 Nov 2021 06:04 PM

பின்னணியில் பிரசாந்த் கிஷோர்? - திரிணமூல் காங்கிரஸில் இணைந்த மேகலாயா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 

புதுடெல்லி

நாடுதழுவிய அளவில் திறமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸால் செயல்பட முடியவில்லை, அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதலுடன் திரிணமூல் காங்கிரஸில் இணைந்ததாக மேகலாயா எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா தெரிவித்துள்ளார்.

பிஹார் காங்கிரஸைச் சேர்ந்த கீர்த்தி ஆசாத், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பவான் வர்மா, ஹரியாணா அரசியல் தலைவர் அசோக் தன்வர் ஆகியோர் கடந்த இரு நாட்களுக்கு முன் திரிணமூல் காங்கிஸில் சேர்ந்தனர்.

இந்தநிலையில் அடுத்ததாக மேகாலயாவில் மாற்றம் நடந்துள்ளது. மேகாலயாவில் நேற்று நள்ளிரவு திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான முகுல் சங்மா உள்பட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதில் 12 பேர் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர்.

2023ம் ஆண்டு மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் போது காங்கிரஸ் கட்சியிலிருந்து 17 பேரில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்வது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். கட்சி தாவல் சட்டத்தின் கீழும் இந்த நடவடிக்கை வராது, மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் வேறு ஒரு கட்சிக்கு செல்லும்போது இது கட்சித் தாவல் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் இருக்கிறது.

முகுல் சங்மா

இதுகுறித்து கூறியதாவது:

நாடுதழுவிய அளவில் திறமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸால் செயல்பட முடியவில்லை. இது தான் என்னையும், எங்கள் கட்சியைச் சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் திரிணமுல் காங்கிரஸில் சேரத் தூண்டியது.

நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக கடமையாற்ற தேசம் அழைப்பு விடுக்கிறது. ஆனால் அதனை ஏற்க காங்கிரஸ் தயாராக இல்லை. இந்தியாவில் ஆளும் கட்சிக்கு ஒரு வலுவான மாற்று தேவை. இது மக்களின் துடிப்பான தேடல். ஆனால் அதனை செயயும் நிலையில் காங்கிரஸ் இல்லை.

எனவே, அத்தகைய கட்சியைக் கண்டுபிடிப்பதற்கான எங்கள் முயற்சி இறுதியில் எங்களை திரிணமூல் காங்கிரஸில் சேர தூண்டியது. திறமையான எதிர்கட்சியாக செயல்பட நாங்கள் முயற்சித்தோம். ஆனால் அதுவும் நடைபெறவில்லை.

தலைமையை தொடர்ந்து வற்புறுத்தி இதனை எப்படியாவது செய்து விட வேண்டும் எனவும் முயன்றோம். ஆனால் காங்கிரஸ் தலைமைக்கு அந்த விருப்பம் இல்லை. நாங்கள் டெல்லிக்கு பயணங்கள் மேற்கொண்டோம், ஆனால் அது தற்போது வேறு வழியில் செல்வதில் தான் முடிந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடனான தொடர்பு காரணமாகவே நானும் மற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தோம்.

பல்வேறு மக்கள் கொண்ட நமது தேசத்திற்கு சற்றும் ஒத்துப்போகாத சித்தாந்தத்தை முன் வைக்கும் மத்திய அரசுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் போராடுகிறது. அந்த கட்சியில் இணைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மக்களின் நம்பிக்கையையு வரும் 2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கையுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x