Last Updated : 25 Nov, 2021 09:39 AM

 

Published : 25 Nov 2021 09:39 AM
Last Updated : 25 Nov 2021 09:39 AM

இந்தியாவின் மாபெரும் தலைவர்களுடன் மம்தா பானர்ஜியை ஒப்பிட்டு சுப்பிரமணியன் சுவாமி புகழாரம்

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியை டெல்லியில் நேற்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சந்தித்த காட்சி | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி


இந்தியாவின் மாபெரும் தலைவர்களான ஜெயபிரகாஷ் நராயண், மொரார்ஜி தேசாய், ராஜீவ்காந்தி, நரசிம்ம ராவ் போன்ற தவைவர்களுக்கு இணையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியை ஒப்பி்ட்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகழாரம் சூட்டினார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக மே.வங்கத்தில் ஆட்சியைச் தக்கவைத்துள்ளார். 3-வது முறையாக தேர்தலில் வென்றபின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை பல்வேறு மாநிலங்களிலும் பரப்பவும், தடம்பதிக்கவும் மம்தா முயன்று வருகிறார்.

திரிபுரா, மேகாலயா, கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேகமாகச் செயல்பட்டு வருகிறது. கோவாவில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மேகலாயாவில் 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர். பிஹாரில் முக்கியத் தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தனர்.

மே.வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த பலர் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பிவிட்டனர். இதனால் திரிணமூல் காங்கிரஸ் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில் 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு வந்துள்ள மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் எவ்வாறு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம், எந்தெந்த பிரச்சினைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் பேசலாம் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் மம்தா பானர்ஜி.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப்பின், சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நான் பார்த்த, பணியாற்றிய இந்திய அரசியல்தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயண், முன்னாள் பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், சந்திரசேகர் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருக்கு இணையாக மம்தா பானர்ஜி இருக்கிறார். இந்த மாபெரும் தலைவர்கள் கூறியது அர்த்தமுள்ளதாக இருந்தது, அவர்கள் அர்த்தமுள்ளதை மட்டுமே சொன்னார்கள். இந்திய அரசியலில் இது மிகவும் மம்தா பானர்ஜிக்கு இருக்கும் அரிதான குணம்” எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x