

ஆந்திர சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரு மான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரதுகுடும்பத்தை பொது விநியோகத் துறை அமைச்சர் நானி மற்றும், ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் வம்சி, அம்பாட்டி ராம்பாபு மற்றும் சந்திரசேகர் ரெட்டி ஆகியோர் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பின் நானி உள்ளிட்ட 4 பேர் மீதும் தெலுங்கு தேசம் கட்சியினர் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
என்டிஆர் குடும்பத்தினரும் இவர்களை வன்மையாக கண்டித்தனர். மேலும், நடிகர்கள் பாலகிருஷ்ணா, ஜூனியர் என்டிஆர், நாரா ரோஹித் மற்றும் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகேந்திர பாபு ஆகியோரும் கண்டித்தனர்.
இந்த காரணத்தினால், அமைச்சர் உட்பட மேற்கூறிய 3 எம்எல்ஏ.க்களுக்கு தொலைபேசியில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, இவர்கள் 4 பேருக்கும் நேற்று முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதென அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.