Last Updated : 24 Nov, 2021 02:38 PM

4  

Published : 24 Nov 2021 02:38 PM
Last Updated : 24 Nov 2021 02:38 PM

சிறுவனுடன் உறவு மோசமான பாலியல் கொடுமையாகாது: போக்ஸோ குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு: அலகாபாத் உயர் நீதிமன்றம்

பிரதிநிதித்துவப்படம்

பிரயாக்ராஜ்

மைனர் சிறுவனுடன் பாலியல் உறவு கொள்ளுதல் என்பது போக்ஸோ சட்டத்தின் கீழ் மோசமான பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீரப்பு வழங்கியுள்ளது.

போக்ஸோ சட்டத்தில் தண்டிக்கப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையை 7 ஆண்டுகளாக நீதிமன்றம் குறைத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜான்ஸி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுசுமத்தப்பட்டது. அதாவது 10 வயது சிறுவனுக்கு ரூ.20 ரூபாய் ஆசைகாட்டி அவருடன் வாய்வழியாக பாலியல் உறவு கொண்டார் என்றும் வெளியே கூறினால் கொடூரமானவிளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தினார் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஐபிசி பிரிவு 377, 506, போக்ஸோ சட்டம் ஆகியவை கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஜான்ஸி விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அனில் குமார் ஓஹா நேற்று தீர்ப்பளித்தார். அதில், “ போக்ஸோ சட்டம் பிரிவு 5/6 மற்றும் 9 (எம்) பிரிவில் எந்தவிதமான குற்றத்தையும் குற்றம்சாட்டப்பட்டவர் செய்யவில்லை. ஊடுருவல் பாலியல் கொடுமைதான் வழக்கில் நடந்துள்ளது இந்த வழக்கில் போக்ஸோ சட்டம் பிரிவு 4-ன் கீழ் மோசமான பாலியல் துன்புறுத்தல் என்பது வராது. ஆதலால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைக்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவதை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில், “ குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரின் உடலை சீண்டி உள்ளார், எனவே இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது. உடல்ரீதியான தொடர்பு இல்லாததால் போக்சோ சட்டத்தின் கீழ் கருதப்படாது” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டப்பிரிவையும் ரத்து செய்தது.

மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமீபத்தில் கண்டித்த உச்ச நீதிமன்றம் போக்ஸோ சட்டப்படி, உடலோடு,உடல் தொடர்பு ஏற்பட்டால்தான் நடவடிக்கை என்ற அர்த்தமில்லை . பாலியல் வன்கொடுமைகளை நடக்க காரணமாக இருப்பதே பாலியல் நோக்கம்தான். குழந்தையின் உடலோடு, உடல் உரசுவது அல்ல. சட்டத்தின் நோக்கம் என்பது குற்றவாளியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச்செல்வதாக இருக்காது என்று கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x