கிரிப்டோகன்சிக்கு தடை வரலாம்?- குளிர்காலக் கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

படம் உதவி | ட்விட்டர்
படம் உதவி | ட்விட்டர்
Updated on
2 min read

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா, சில தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை, ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ கிரிப்டோகரன்சிக்கு அனுமதி உள்ளிட்ட 26 மசோதாக்கள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

அவசரச்சட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட 3 சட்டங்களுக்குப் பதிலாகவும் மசோதாக்கள் கொண்டுவந்து நிறைவேற்றவும் மத்திய அ ரசு திட்டமிட்டுள்ளது. போதை மருந்து தடுப்பு, மத்தியஊழல் தடுப்பு திருத்தச்சடம், டெல்லி சிறப்பு போலீஸ் உருவாக்கம் ஆகியவற்றுக்கான அவசரச்சட்டங்களுக்கு பதிலாக சட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதையடுத்து, அதை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த சட்டங்களை திரும்ப் பெறுவதற்கான மசோதாக்கள் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது

கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, சில தனியார் கிரிப்டோகரன்சிக்கள் தடை செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரபூர்வ கிரிப்டோகரன்சிகள் கொண்டுவர அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்படும்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால், அதையொட்டி, பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் திருத்தச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஊதிய திருத்த மசோதா 2021 நிறைவேற்றப்பட உள்ளது.

இது தவிர திவால் சட்டத்தில் 2-வது திருத்த மசோதா, ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு மசோதா, உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன.

குடியேற்றச் சட்டம் 1983 மாற்றப்பட்டு புதிதாக குடியேற்ற மசோதா 2021 கொண்டுவரப்படஉள்ளது. குடியேற்றத்தில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அடங்கியதாக இந்த மசோதா இருக்கும்.

மனிதக் கடத்தலைத் தடுத்தல், பாதுகாத்தல், மறுவாழ்வு திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது.

இதன் மூலம் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் கடத்தல் செயலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும், பாதிக்கப்படுவோருக்கு போதுமான பாதுகாப்பு, மறுவாழ்வு நடவடிக்கைளை வலியுறுத்தும்விதமாகவும் அவர்களுக்கு சட்டரீதியான உதவிகள், உரிமைகள் நிலைநாட்டவும் மசோதாவில் அம்சங்கள் இருக்கும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in