Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

ஏழை தலித் மாணவருக்கு இடம் வழங்க வேண்டும்: மும்பை ஐஐடிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஏழை தலித் மாணவருக்கு மும்பை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் சேர்க்கை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் ஜெய்பீர் சிங். தலித் பிரிவைச் சேர்ந்த இவர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஐஐ டிஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வில் அகில இந்திய அளவில் 25,864-வது இடம் பிடித்திருந்தார். மேலும் எஸ்.சி. பிரிவில் இவருக்கு 864-வது இடம் கிடைத்து.

இதையடுத்து கடந்த அக்டோபர் 27-ம்தேதி மும்பை ஐஐடி-யில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இவருக்கு இடம் கிடைத்தது. இதையடுத்து சேர்க்கைக்கான அனைத்து செயல்பாடுகளையும் ஆன்-லைனில் ஜெய்பிங் முடித்தார். ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக பகுதியளவு கட்டணத்தை மட்டுமே அவரால் செலுத்தமுடிந்தது. எஞ்சியுள்ள கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அவர் பல முறை முயன்றும் பணத்தைச் செலுத்த முடியவில்லை. இதுதொடர்பாக ஐஐடிநிர்வாகத்தை அவர் தொடர்புகொண்ட போதும் பணத்தைச் செலுத்த முடியவில்லை.

இதைத் தொடர்ந்து அவர், காரக்பூரிலுள்ள மும்பை ஐஐடி நிர்வாக அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பணத்தைச் செலுத்த முயன்றார். ஆனால் பயன் இல்லை. பணத்தைச் செலுத்த முடியாததால் அவருக்கு இடமில்லை என்று ஐஐடி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜெய்பீர் சிங் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஐஐடிக்கு தேர்வாகியும் குறித்த நேரத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பை இழந்த 17 வயது தலித் மாணவன் பிரின்ஸ் ஜெய்பீர் சிங்குக்கு இடத்தை மும்பை ஐஐடி வழங்கவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x