

மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையில், நடன ‘பார்’களை தடை செய்ய புது சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரித்து, அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு தடை விதித்தது.
ஆனால், நடன பார்கள் தொடங்க போலீஸார் 24 புதிய நிபந்தனைகளை விதித்தனர். இதை எதிர்த்து நடன பார் சங்க உறுப்பினர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுடைய மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், மார்ச் 15-ம் தேதிக்குள் நடன பார்கள் திறக்க அனுமதி வழங்க உத்தரவிட்டது.