Published : 22 Nov 2021 03:29 PM
Last Updated : 22 Nov 2021 03:29 PM

தீவிரவாதியைக் கொன்றபோது தன்னுயிரை ஈந்த சுபேதார் சோம்பிர்: சௌரிய சக்ரா விருது

சுபேதார் சோம்பிர்-க்கு மரணத்திற்குப் பின் சௌரிய சக்ரா விருது இன்று வழங்கப்பட்டது. விருதை அவரது மனைவியும், தாயும் பெறுகின்றனர்

புதுடெல்லி 

காஷ்மீரில் முக்கிய தீவிரவாதியைக் கொன்றபோது தன்னுயிரை ஈந்த சுபேதார் சோம்பிர்க்கு மரணத்திற்குப் பின் சௌரிய சக்ரா விருது அவரது மனைவியிடம் இன்று வழங்கப்பட்டது.

ராணுவத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின்போது தீரத்துடன் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கினார்.

இதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை முறியடித்ததற்காக, இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி பிரகாஷ் ஜாதவுக்கு, இரண்டாவது மிக உயர்ந்த வீர விருதான கீர்த்தி சக்ரா (மரணத்திற்குப் பின்) வழங்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொள்ளும் பிரகாஷ் ஜாதவின் மனைவி மற்றும் தாய்

ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றபோது தன்னுயிரை ஈந்த மேஜர் விபூதி சங்கர் தௌண்டியாலுக்கு சௌர்ய சக்ரா (மரணத்திற்குப் பின்) விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

மேஜர் விபூதி சங்கர் தௌண்டியாலின் மனைவி நிதிகா கவுல் விருது பெறுகிறார்

காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது முக்கிய தீவிரவாதியைக் கொன்றபாது தன்னுயிரை ஈந்த சுபேதார் சோம்பிர்-க்கு மரணத்திற்குப் பின் சௌரிய சக்ரா விருது இன்று வழங்கப்பட்டது. அந்த விருதை இளம் வயதில் கணவனை இழந்த சுபேதார் சோம்பிரின் மனைவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x