சிஏஏ வாபஸ் பற்றி நேரடியாகக் கேளுங்கள்; நீங்களும் பாஜகவும் நட்புதானே: ஒவைசியை விமர்சித்த ராகேஷ் திக்கைத்

பிகேயு தலைவர் ராகேஷ் திக்கைத் | கோப்புப்படம்
பிகேயு தலைவர் ராகேஷ் திக்கைத் | கோப்புப்படம்
Updated on
2 min read


குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி வாபஸ் குறித்து பாஜகவிடம் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி நேரடியாகக் கேட்கலாமே, நீங்கள் இருவரும் நட்புதானே என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பாரபங்கியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர்அசாசுதீன் ஒவைசி பேசுகையில் “வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவு எடுத்ததைப் போல், குடியுரிமைத் திருத்தச்சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும், அந்த முடிவு எடுக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு சட்டம் கொண்டுவந்தால், மீண்டும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவோம், இங்கு ஒரு சாஹின்பாக்கை உருவாக்குவோம். நானும்கூட இங்குவந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்.

விவசாயிகளை மத்திய அரசை நம்பவில்லை, நாடாளுமன்றம் தொடங்கி, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதாஅறிமுகமாகட்டும் அதன்பின் முடிவு எடுப்பதாகக் கூறியுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசிக்கு நேரடியாகப் பதில் அளிக்கும் வகையில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைத் லக்னோவில் இன்று பேட்டியளித்தார்.அவர் கூறுகையில் “ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசியும், பாஜகவும் மாமன்-மைத்துனர் நட்புபோலத்தானே இருக்கிறீர்கள், ஒவைசி தனக்கு வேண்டியதை கேட்டுப் பெற வேண்டியதுதானே. என்ஆர்சி, சிஏஏ பற்றி ஒவைசி தொலைக்காட்சியில் பேசித்தான் கோரிக்கை வைக்க வேண்டியதில்லை நேரடியாகவே பேசலாம்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜெய் மிஸ்ரா தெனி நீக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிட வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கிட வேண்டும். பால் குறித்த கொள்கை வர இருக்கிறது, விதைக்கான சட்டம் இருக்கிறது இரண்டையும் எதிர்க்கிறோம். அனைத்தையும் விவாதிக்க இருக்கிறோம்
இவ்வாறு திகைத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in