

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின்போது தீரத்துடன் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவிக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தன. 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27- தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.
இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து அந்நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப்படையின் 51-வது படைப்பிரிவை பாராட்டி குழு விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து அபிநந்தனுக்கு அவரது வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ராணுவ கமாண்டர் அபிநந்தன், குழு கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறார்.
இதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை முறியடித்ததற்காக, இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி பிரகாஷ் ஜாதவுக்கு, இரண்டாவது மிக உயர்ந்த வீர விருதான கீர்த்தி சக்ரா (மரணத்திற்குப் பின்) வழங்கப்படுகிறது.
மேலும் ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றபோது தன்னுயிரை ஈந்த மேஜர் விபூதி சங்கர் தௌண்டியாலுக்கு சௌர்ய சக்ரா (மரணத்திற்குப் பின்) விருது வழங்கப்படுகிறது.
காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது முக்கிய தீவிரவாதியைக் கொன்றதற்காக நைப் சுபேதார் சோம்பிர் மரணத்திற்குப் பின் சௌரிய சக்ராவைப் பெறுகிறார்.
மரணத்திற்குப் பின் சௌரிய சக்ராவைப் பெறுவார்.