

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைப் போல், குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை வாபஸ்பெறாவிட்டால் மீண்டும்போராட்டம் நடக்கும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர்அசாசுதீன் ஒவைசி மத்திய அரசுக்கு எச்சரி்க்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பாரபங்கியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர்அசாசுதீன் ஒவைசி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவு எடுத்ததைப் போல், குடியுரிமைத் திருத்தச்சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும், அந்த முடிவு எடுக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு சட்டம் கொண்டுவந்தால், மீண்டும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவோம், இங்கு ஒரு சாஹின்பாக்கை உருவாக்குவோம். நானும்கூட இங்குவந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்.
விவசாயிகளை மத்திய அரசை நம்பவில்லை, நாடாளுமன்றம் தொடங்கி, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதாஅறிமுகமாகட்டும் அதன்பின் முடிவு எடுப்பதாகக் கூறியுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்
இதனிடையே ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர்அசாசுதீன் ஒவைசி லக்னோவில் அளித்த பேட்டியில் கூறுகையில் “ உ.பி. தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேசி வருகிறோம் விரைவில் அதுகுறித்து தெரிவிப்பேன். கூட்டணி அமைக்கிறோ அல்லது இல்லையோ நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. உத்தரப்பிரதேசத்தில் எங்கள் கட்சி வலுவாக இருக்கிறது.
இவ்வாறு அசாசுதீன் ஒவைசி தெரிவித்தார்.
2017ம் ஆண்டு உ.பி. சட்டப்ேபரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 312 இடங்களையும், சமாஜ்வாதிக் கட்சி 47 இடங்களையும், பகுஜன்சமாஜ் 19 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும் பிற சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் வென்றன. இந்த முறை ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடும்போது, சிறுபான்மையினர் வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிைடக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் குறையக்கூடும்.