Published : 22 Nov 2021 03:05 AM
Last Updated : 22 Nov 2021 03:05 AM

பொதுமக்கள் மீதான போலீஸாரின் அணுகுமுறையில் நேர்மறை மாற்றம்: டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பாராட்டு

பொது மக்கள் மீதான போலீஸாரின் அணுகுமுறையில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது பாராட்டத்தக்கது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 56-வது டிஜிபிக்கள் மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2-வது மற்றும் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

முன்பு இருந்ததைவிட தற்போது நாட்டின் காவல் துறையில்எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக போலீஸாருக்கு நவீன கருவிகள் வழங்குதல், அவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களை செய்து கொடுத்துள்ளோம். மேலும் பொது மக்கள் மீதான போலீஸாரின் அணுகுமுறையில் நேர்மறையான மாற்றம் ஏற்பட் டுள்ளது. இது பாராட்டத்தக்கது.

2014-ம் ஆண்டு நவீனகாவல் துறை திட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்தது. அந்த திட்டத்தை காவல் துறை தலைவர்கள் மேம்படுத்தி பொதுமக்களுக்கு பயன்படும்படி செயல்படுத்த வேண்டும். மக்களின் நலனுக்காக ட்ரோன்தொழில்நுட்பத்தை நேர்மறையான செயல்களுக்கு போலீஸார் பயன்படுத்தலாம். போலீஸ் படைகளில் அதன் தொடர்ச்சியான மாற்றம் மற்றும் நிறுவனமயமாக்கலுக்கான சாலை வரைபடத்தை உருவாக்க டிஜிபிக்கள் முயற்சி செய்ய வேண்டும். போலீஸார் எதிர்கொள்ளும் வழக்கமான சில சவால்களை சமாளிக்க ஹேக்கத்தான் மூலம் தொழில்நுட்ப தீர்வுகளைத் தேடுவதற்கு உயர் தகுதி வாய்ந்த இளைஞர்களை ஈடுபடுத்தலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

இம்மாநாட்டில், இணையவழி குற்றங்கள், தீவிரவாத தாக்குதல், போதைப் பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x