Published : 22 Nov 2021 03:05 AM
Last Updated : 22 Nov 2021 03:05 AM

உத்தர பிரதேசத்தில் இறந்துவிட்டார் என நினைத்து பிணவறை குளிர்ச்சாதன பெட்டியில் வைக்கப்பட்டவர் உயிருடன் திரும்பினார்

இறந்துவிட்டார் என்று நினைத்து குளிர்ச்சாதன வசதியுள்ள பிண வறையில் வைக்கப்பட்ட நபர் உயிருடன் திரும்பிய சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் கேஷ் குமார். இவர் மொரதா பாத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியில் சென்ற போது சாலை விபத்தில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கேஷ் குமாரை மருத்துவ மனையில் இருந்த டாக்டர்கள் பரிசோதித்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை யடுத்து அவரது உடல், அருகிலுள்ள அரசு மருத்துவமனையின் குளிர்ச்சாதனை வசதி கொண்ட பிணவறையில் வைக்கப்பட்டது.

உறவினர்கள் அதிர்ச்சி

கேஷ் குமார் இறந்தது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உறவினர்களும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அப்போது பிணவளையில் இருந்து அவரது உடலை வெளியே எடுத்த போது அவர் அசைவது தெரிந்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவர் உயிருடன் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து அரசுமருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர குமார் கூறியதாவது:

மருத்துவமனைக்கு அவரது உடல் வந்த போது பணியில் இருந்த டாக்டர் அவரை பரிசோதித் துள்ளார். அப்போது அவரது உடலில் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் இறந்துவிட்டார் என்று கூறி பிணவறையில் வைத்தோம்.

மருத்துவ அதிசயம்

ஆனால் பிரேதப் பரிசோத னைக்காக தயாராகிக் கொண் டிருந்த போது அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதை நிச்சயம் ஒரு மருத்துவ அதிசயம் என்றே சொல்வேன். அவர் தொடர்ந்து கோமாவில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்். இவ்வாறு அவர் கூறினார்.

உயிருடன் இருந்த ஒருவரை டாக்டர்கள் எப்படி இறந்தார் என்று அறிவித்தனர் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x