

கரோனா அறிகுறி உள்ளவர்களை குணப்படுத்த உதவும் ஆயுஷ்-64 மாத்திரை தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை 46 நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய ஆயுஷ்அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பில் அதாவது ஏ சிம்டம் மற்றும் குறைந்த அளவு நோய் தொற்றுஅறிகுறி உள்ளவர்களை குணப்படுத்துவதற்கு ஆயுஷ்-64 மாத்திரை மிகவும் உதவியாக உள்ளது. இதுவரை 7 நிறுவனங்கள் மட்டுமே இந்த மாத்திரையைத் தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றிருந்தன. தற்போதுஇந்த மாத்திரையின் தேவையைக் கருத்தில் கொண்டு அதிகஅளவிலான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் மலேரியா நோய்க்கான மாத்திரையாக ஆயுஷ்-64 பரிந்துரைக்கப்பட்டு வந்தது. நாட்டில் கரோனா வைரஸ்பரவியபோது குறைந்த அளவிலான பாதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக இருந்தது. கரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த 63 ஆயிரம் பேர் இந்த மாத்திரையை சாப்பிட்டு விரைவாக குணமடைந் துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆயுஷ்-64 மாத்திரைக்கான தேவை அதிகரித்தது. இது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவியதோடு, காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க உதவியது. கரோனா முதல் அலை தீவிரமடைந்தபோது பலருக்கும் இது மிகவும் உதவியாக இருந்தது.
இந்த மாத்திரையின் செயல் பாடு குறித்து 8 தனித்தனி மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. இது மிகச் சிறந்த பலனை அளித்துள்ளது. மேலும் எவ்வித பக்க விளைவுகளையும் இந்த மாத்திரை ஏற்படுத்தவில்லை என்பதும் இதன் தனிச் சிறப்பாகும். - பிடிஐ